"இலங்கை மக்களின் சமூக பொருளாதார தரத்தை உயர்த்துவதற்கு, சூழல் ரீதியில் நிலைபெயரா தரைகீழ் நீர் வளங்களினை அபிவிருத்தி செய்தல்."

நிலத்தடி நீருக்கு முக்கியத்துவமளித்து, இலங்கையின் நீர் வளங்கள் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் ஒரு அமைப்பாக 1966ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

அதன் பணிகள் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி செயல்திறனை நோக்கிய, தரைகீழ் நீர்வள அபிவிருத்தி ஆற்றல்களைப் பகிர்தலை அடையாளங்காணுவதற்கான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக விஸ்தரிக்கப்பட்டன-1978

நடைமுறையிலுள்ள கருத்திட்டங்கள்......

பொல்கொடை ஆற்றுப் பள்ளத்தாக்கின் தெரிவு செய்யப்பட்ட இடங்களிலுள்ள நிலத்தடி நீர் வளங்களின் பயன்பாட்டைக் கணிப்பீடு செய்வதே பொல்கொடை ஆற்றுப் பள்ளத்தாக்கு நீர் வளங்கள் கற்கைநெறியின் பிரதான குறிக்கோளாக இருக்கின்றது. கொழும்பைச் சூழவுள்ள புறநகர்ப்பகுதிகளில், நிலத்தடி நீர் வளங்களான குடிநீர், வீட்டுத்தேவைகள் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான மிக அத்தியாவசியமான வளங்களாக மாறத்தொடங்குகின்றமையால், மாசுபடாத மற்றும் பயன்படுகின்ற மேற்பரப்பு நீர் நிலைகளை இனங்காண்பதே இந்தக் கற்கையிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாக உள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இயற்கை ஏரியாக ஊகிக்கப்படுகின்ற பொல்கொடை, அகுருவத்தொட்டை தொடக்கம் பிலியந்தலை வரை விரிவுபடுத்தப்படுகிறது.

மேலும்.....
புதியவை....
பொல்கொடை கங்கை, நீர் வள கங்கை, அத்தனகல்ல ஓயா, ஆற்றுப்பள்ளத்தாக்கு கற்கை மற்றும் சூரிய சக்தி நிலத்தடி நீர் அபிவிருத்தி கருத்திட்டம் என்பனவே தற்போதுள்ள பிரதான கற்கைநெறிகளாகும். அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, மாத்தளை, நுவரெலியாமற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் கிராமப்புற சமுதாயங்களுக்கு நிலத்தடி நீர் வழங்கவதற்காக சூரிய சக்தியில் பயன்படும் மின், நீரில் மூழ்கும் நீர்பம்பிகளுடன் கூடிய 587 கைப்பம்பி குழாய்க்கிணறுகளின் நிர்மாணப்பணி சூரிய சக்தி நிலத்தடி நீர் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

மேலும்.....

© 2006 Water Resources Board All Rights Reserved – Developed in Association with Site By