பொல்கொடை கங்கை, நீர் வள கங்கை, அத்தனகல்ல ஓயா, ஆற்றுப்பள்ளத்தாக்கு கற்கை மற்றும் சூரிய சக்தி நிலத்தடி நீர் அபிவிருத்தி கருத்திட்டம் என்பனவே தற்போதுள்ள பிரதான கற்கைநெறிகளாகும்.
அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, மாத்தளை, நுவரெலியாமற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் கிராமப்புற சமுதாயங்களுக்கு நிலத்தடி நீர் வழங்கவதற்காக சூரிய சக்தியில் பயன்படும் மின், நீரில் மூழ்கும் நீர்பம்பிகளுடன் கூடிய 587 கைப்பம்பி குழாய்க்கிணறுகளின் நிர்மாணப்பணி சூரிய சக்தி நிலத்தடி நீர் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.