நீர்ப்புவியியல் ஆய்வுகளுக்கும் நிலத்தடி நீர் தேடிக்காணலுக்கும் பொறுப்பாக இருத்தலும் குறித்த சில கருத்திட்டங்களிலுள்ள நிலத்தடி நீர் ஆற்றல்களின் கணிப்பிடு மற்றும் அபிவிருத்திக்கான ஆராய்ச்சியினைக் கண்காணித்தலும்.
நீர் பூகர்ப்பவியளார்கள்
புவி பௌதீகவியலாளர்கள்
புவி இரசாயனவியலாளர்கள்
தரைகீழ் கிணறு துளையிடல் பிரிவு
பொருத்தமான கிணறு துளையிடும் தொழினுட்பங்களைச் செயல்படுத்தி கிணற்று திட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, குழாய்க் கிணறுகளுக்கான ஆழமான சிறுதுளை நிர்மாணித்தல். அத்துடன் கைப் பம்பிகளையும் நீருக்கு அடியில் பம்பிகளை பொருத்துதல், குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைச் சோதித்தல் மற்றுமத் கைப் பம்பிகளை மறுசீரமைத்தல் முதலிய அத்தகையனவான இதனுடன் தொடர்பான நடவடிக்கைகளை வலுவாக்கல்.
கொள்ளளவு
சிரேஷ்ட கிணறு துளையிடும் தொழினுட்பவியலாளர்கள் (துளையிடும் அலுவலர்கள்) மற்றும் துணை பணியாளர்கள்-112
கனரக வேலைக்கான துளையிடும் அலகுகள் ஏற்றப்பட்ட பல்வகை நோக்கங்களுக்கான டிரக் வண்டி -10
ஒர கனரக இயந்திரத்தொகுதி பராமரிப்பு சேவை அலகினால் உதவி செய்யப்படல்
வண்டலான சுண்ணாம்புக்கல் மற்றும் பிரிகேம்பிரியப் கடினமான பாறை முதலிய அதிக பளு சுமத்தப்பட்ட, அடித்தளமான பாறைகளில் ஆழமான சிறுதுளைகளைத் துளையிடக்கூடிய திறன் உண்டு.
இயங்கும் பிரிவு
முகாமைத்துவ நிலையான சொத்துக்கள்மூலம் சபையின் பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கணிப்பிடல் திட்டம் சார்ந்த துணை வசதிகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பாகவுள்ள துணைப் பிரிவாகும். அத்துடன் சிவில் மற்றும் இயந்திர பொறியியல் வேலைகள் போன்ற அத்தகைய எல்லா துணை நடவடிக்கைகளும் செயல்படுவதை ஒருங்கிணைக்கின்றது.
சிவில் மற்றும் இயந்திர பொறியியலாளர்கள்s
தொழினுட்ப உதவியாளர்கள்
தரைகீழ் நீர் தரவுத் தொகுதியுடன் கூடிய புவியியல் தகவல் அமைப்பு
புவியியல் தகவல் முறைமை மற்றும் படம் வரைகலையைப் பயன்படுத்தி எல்லா வழியலகுகளையும் உள்ளடக்கிய புவி விஞ்ஞான வரைபடங்களைத் தயாரிப்பதற்காக, நிலத்தடி நீர் தரவுத்தொகுதியைச் சேகரித்தல், பராமரித்தல் மற்றும் நாளதுவரை பதிவுசெய்தலுக்குப் பொறுப்பாக உள்ளது.
தரைகீழ் நீர் தொடர்பான எல்லா தரவுகளையும் கொண்டுள்ள நீரியல் தகவல் அறிவிக்கும் தரவு தொகுதியினை அபிவிருத்தி செய்வதே இந்த அலகின் பிரதான இலக்காக உள்ளது. இது இலங்கையின் எதிர்கால தரைகீழ் நீர் தேடி ஆராய்தல், அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தரைகீழ் நீர் வடிவமைப்பினை இலகுபடுத்துகின்ற தீர்மான உதவி அமைப்பின் (DSS) ஒரு கருவியாகக் காணப்படுகின்றது. இந்த அலகானது, முழு இலங்கையினதும் தரைகீழ் நீர் தேடி ஆராய்தல், அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்துடன் தொடர்பான எல்லா புவி விஞ்ஞான வரைபடங்கள் தயாரிப்பையும் மேற்கொள்கிறது. தரைகீழ் நீர் கண்காணிப்பு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக்கொண்டு, உருவாக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய காட்சிப் பட்டியல்கள், தரைகீழ் நீரின் தரம் மற்றும் அளவின் இடம்சார்ந்த மற்றும் தற்காலிக வேறுபாடுகளைக காண்பிக்கின்றன.
அத்துடன் இந்த அலகானது, அளவில் பெரிய கடதாசி வடிவங்களின் (AO) அச்சிடல் மற்றும் மின்னணு ஒளிகதிர்கொண்டு ஆராய்தலுக்கான வசதிகளை வழங்குகின்றது. காட்சி வரைபடங்கள்>>
ஆய்வுகூடம்
இரசாயன மற்றும் பௌதீக பண்புகளுக்காக நீர் மாதிரிகளைப் பகுத்தாய்தலுக்குப் பொறுப்பாக உள்ளது.
நூலகம்
இது விஞ்ஞான மற்றம் தொழினுட்ப பணியாளர்களின் நிலத்தடி நீர் மற்றும் தொழினுட்பவியல் கற்கைகளுக்காக, அவர்களுக்கு உசாத்துணை பொருட்களை வழங்குகின்றது.
உசாத்துணைக்காக, நிலத்தடி நீர் தொடர்பான கற்கைகள் மீதான பெருமளவு எண்ணிக்கையான பிரசுரிக்கப்பட்ட மற்றும் பிரசுரிக்கப்படாத நூலகப் பொருட்கள் காணப்படுகின்றன. இலங்கையின் நிலத்தடி நீர் கற்கைகள் குறித்து நீர்வள சபையினால் 2000ஆம் ஆண்டு மார்கழி மாதம் தயாரிக்கப்பட்ட புத்தக பட்டியலானது, நிலத்தடி நீர் தொடர்பான ஆவணங்கள் குறித்த தகவலை வழங்குகின்ற ஒரு தரவுத் தொகுதியாகக் காணப்படுகின்றது. இந்தத் தரவுத் தொகுதியானது 1955-1999 வரையான காலப்பகுதிக்கான 327 நூலக பொருட்களைக் கொண்டுள்ளது. இவை நிலத்தடி நீர் தரம், மாசடைதல் மற்றும் சுற்றாடல் பாதிப்புக்கள், நிலத்தடி நீரின் நடவடிமுறை, அமைவு மற்றும் சமதன்மை, நிலத்தடி நீர் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் அத்துடன் நிலத்தடி நீரின் தேவை, பற்றாக்குறை, நுகர்வு மற்றும் வழங்கல் முதலிய 04 பிரதான குழுக்களாக வகைப்படுத்தப்படலாம்.
நிலத்தடி நீர் க்றகையின்மீது பிரசுரிக்கப்பட்ட மற்றும் பிரசுரிக்கப்படாத நூலக பொருட்களும் மற்றும் சில சுருக்கக் குறிப்புகளும் இந்த இணையத்தள இறக்கத்திலிருந்து பெறப்படலாம்.